நமக்கு வாழ்க்கையில் கிட்டும் ஒரு நன்மையை யோகம் என்று சொல்கிறோம். அதாவது அதிர்ஷ்டம். யோகம்
என்பது ஒரு வித நன்மைக்கான அறிகுறி. கிரகங்களின் மூலமாக மனிதர்கள்
பெறக்கூடியது. யோகம் என்பதை ஆழ்ந்து பார்த்தால் யோகம் என்ற வார்த்தைக்கு
முன்னால் வரும் வார்த்தையை வைத்துத்தான் அதனைக் கூற முடியும். யோகம் என்றாலே நன்மைதான் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதாவது தரித்தர யோகம் என்று கூட ஒன்று உள்ளது. வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஒருவர் திடீரென்று ஒரு நாள் கோடீஸ்வரராகி விடுவார். அவருக்கு எதிர்பாராத வகையில் திடீரென்று பண வரவுகள் ஏற்பட்டு வாழ்க்கைத் தரமே உயர்ந்து விடும். எப்படி இவர் திடீரென்று கோடீஸ்வரனானார் என்று அவர் ஜோதிடத்தை ஆராய்ந்தால் அவரின் ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம் உண்டாகியிருக்கும். அரசியலில் சாதாரண தொண்டனாக இருப்பவன் கூட திடீரென்று பெரிய பதவிகளை வகுத்து பெயர் புகழ் போன்றவை உயர்வடையக் கூடிய யோகத்தை பெறுவார்கள். லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றாலும் எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். ஒரு கம்பெனியில் சாதாரண தொழிலாளியாக இருப்பவர் அந்த கம்பெனிக்கே முதலாளியாக கூடிய வாய்ப்பும் உண்டாகும். “கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்” என்று ஒரு வாக்கு உண்டு. கெட்ட
வீட்டிற்குரிய ஒரு கிரகம், மற்றொரு கெட்ட வீட்டில் போய் அமர்ந்தால் விபரீத
ராஜ யோகத்தை உண்டாக்கும். அதாவது மைனஸ் x மைனஸ் = பிளஸ் என்பது போன்றது. விபரீத ராஜ யோகம் என்பது ஜெனன ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் என கூறக்கூடிய 3,6,8,12ம் இடத்திற்குரிய அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ அல்லது 3ம் அதிபதி 6,8,12ல் அமைந்திருந்தாலோ 6ஆம் அதிபதி 3,8,12ல் அமைந்திருந்தாலோ 8ஆம் அதிபதி 3,6,12ல் அமைந்திருந்தாலோ 12ஆம் அதிபதி 3,6,8ல் அமைந்திருந்தாலோ உண்டாகக் கூடியதாகும். எந்தவொரு துறையிலும் சாதனை செய்யும் சாதனையாளர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் இந்த விபரீத ராஜ யோகம் கண்டிப்பாக இருக்கும். அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும். திருடப் போனாலும் திசை வேண்டும் என்பார்கள். இந்த அதிர்ஷ்டமும் திசையும் விபரீத ராஜ யோகம் உள்ளவர்களுக்கு தானாகவே அமையும். இப்படி அமையப் பெற்ற கிரகங்களின் தசாவோ, புத்தியோ நடைபெறும் காலங்களில் ஜாதகர் ஒர் உயர்வான நிலையினை அடைவார்.
முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் ஜாதகம் பார்த்தால். இந்த யோகம் அமைந்திருப்பதை காண முடியும். 8க்குரிய சந்திரன் 8ல் ஆட்சி பெற்று இருக்க, 6க்குரிய சுக்ரன் 8ல் அந்த சந்திரனுடனும், 12க்குரிய செவ்வாயுடனும் சேர்க்கை பெற்று இந்த யோகத்தை அவருக்கு தந்திருக்கிறது.
கிங்பிஷர் டாக்டர் விஜய் மல்லைய்யா ஜாதகம் பார்த்தால் இந்த விபரீத ராஜயோகம் அமைந்துள்ளதை காண முடியும். . 6க்குரிய சந்திரன் 12ல் இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் ஜாதகம் பார்த்தாலும் இந்த யோகத்தை காண முடியும்
லக்னத்துக்கு 12க்குரிய சந்திரன் 6ல் உச்சம் பெற்ற செவ்வாயுடன் சேர்க்கை பெற்று காணப்படுகிறது.
ஒசாமா பின்லேடன் ஜாதகம் (http://karthikjothidam.blogspot.in/2015/07/blog-post_56.html) பார்த்தாலும் இந்த விபரீத ராஜயோகம் அமைந்துள்ளதை காண முடியும். 8க்குரிய புதன் 6ல் உச்சம்பெற்ற சூரியனுடனும் கேதுவுடனும் சேர்க்கை பெற்றுள்ளது.
உங்கள் ராஜ்